காலை 8 மணிக்கு முன்னதாக இந்த செயல்களை செய்தால் இன்றைய நாள் உங்களுடையது!

Default Image

காலை எழுந்தவுடன் குறிப்பிட்ட சில வேலைகளை முடித்து விட்டால் அன்றைய நாள் நமக்கான நாளாக மாறிவிடும். அதற்கு முன்னர் இரவு தூக்கம் மிக அவசியம். ஒரு மனிதன் குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும். இரவு தூக்கம் வரும்போது தூக்கத்தை தள்ளிப்போடாமல் தூங்கிவிட வேண்டும். அதனால் நம் கண்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.  கண்களில் தெளிவான பார்வை கிடைக்கும். ஞாபகசக்தி அதிகரிக்கும். மன அழுத்தம் குறைந்துவிடும்.
அடுத்தது காலை 8 மணிக்குள் குறிப்பிட்ட சில வேலைகளை முடித்துவிட வேண்டும். காலை சீக்கிரம் எழுந்து விடுவதால் நமது ஆயுள் அதிகரிக்கும் என சில முக்கிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேநீர் அருந்துவது காபி குடிப்பதோ கூடாது. முதலில் படுக்கையை சரி செய்துவிட்டு அரைமணி நேரத்திற்குள்ளாக போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
பிறகு உடற்பயிற்சி செய்ய வேண்டும். பின்னர் இன்று நாம் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு குறிப்பேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும். செல்போனில் அல்ல.
அடுத்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பதால் ரத்தம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும். காலையில் ரத்தம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தால் அன்று முதலே நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். அடுத்ததாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். முக்கியமாக புரத சத்து நிரம்பிய உணவுகளை சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
காலை எழுந்தவுடன் செல்போன் இணையதளம் போன்றவற்றில் மூழ்கிவிட கூடாது. 8 மணி வரை செல்போனை ஒதுக்கி வைத்தல் நல்லது.  8 மணிக்குள்ளாக இந்த வேலைகளை செய்துவிட்டு நீங்கள் தயாரானால் அன்றைய நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக மாறிவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்