ஒரு மனிதனின் காலை உணவு என்பது மிக முக்கியம். இரவு சாப்பிட்டு விட்டு 10 மணி நேரம் கழித்து சாப்பிடுவதால் காலை உணவு சத்துள்ளதாக கண்டிப்பாக இருக்கவேண்டும். காலை உணவு சாப்பிடமாலோ, அல்லது சத்தற்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நமது நல்ல திறமைகளை கூட செய்ய முடியாத சூழல் உருவாகும். ஆதலால் காலை உணவு மிக முக்கியம்.
காலை உணவில் முதலிடம் இட்லி தான். வேகவைத்த அரிசி உளுந்தமாவில் கார்போஹைடிரேட் அதிகளவில் உள்ளது. உடன் சாம்பாரில் கார்போஹைடிரேட் மற்றும் புரோட்டீன் அதிக அளவில் இருக்கிறதால் இந்தியர்களின் சிறந்த காலை உணவு இட்லி என சர்வதேச உணவு தரகட்டுப்பாட்டு மையம் சான்றளித்துள்ளது.
அடுத்து, தோசை சுட்ட கல்லில் அரிசி மாவு இட்லியில் உள்ள அதே சத்துக்கள் இதிலும் குறையாமல் இருக்கிறதாம்.
மூன்றாவதாக பொங்கல். இதனை சாப்பிட்டால் தூக்கம் வரும், மந்த நிலை காணப்படும் என கூறப்படுவது வழக்கம். அதற்க்கு காரணம் அதில் சேர்க்கப்படும் வனஸ்பதி தான். அதனால் தான் தூக்கமும் மந்தநிலையும் ஏற்படுகிறது. அதற்க்கு பதிலாக அளவோடு நெய் சேர்த்து சமைத்தால் அது காலை உணவுக்கு மிக ஏற்றது. இதிலும் கார்போஹைடிரேட் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் இருக்கிறது.
நான்காவதாக புட்டும் கொண்டக்கடலை கூட்டும் தான். வேகவைத்துள்ள புட்டில் இருக்கும் கார்போஹைடிரேட் மற்றும் கொண்டைக்கடலையில் உள்ள புரோட்டீன் சத்துக்கள் உங்களை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
ஐந்தாவதாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் கோதுமையில் செய்த உப்மா, சப்பாத்தி போன்றவற்றை சாப்பிடலாம்/
ககுழந்தைகளுக்கு சத்துமாவு கஞ்சி மிகவும் நல்லது. அவர்கள் சாப்பிட மறுத்தால் சிட்ரஸ் பழங்கள், முளைகட்டிய பயிர், அவளில் செய்த உணவு ஏதேனும் கொடுத்துவிட வேண்டும். பால் மட்டும் குடித்துவிட்டு பள்ளிக்கு அனுப்பிவிடக்கூடாது. அது விரைவில் பசியை தூண்டி குழந்தைகளை சோர்வடைய வைத்துவிடும். குழந்தைகளுக்கு தினம் ஒரு முட்டை கொடுத்தால் புரோட்டின் சத்து அதிகரிக்கும்.
மேற்கண்ட அணைத்து உணவுகளையும் வீட்டில் செய்ய வேண்டும். அரிசி, கோதுமை போன்ற மாவுகள் வீட்டில் அரைத்து வைத்துக்கொளவது மிகவும் நல்லது.
சாப்பிடக்கூடாத உணவுகள் துரித உணவுகளான நூடுல்ஸ், மைதாவில் செய்த பரோட்டா போன்ற உணவுகள், எண்ணையில் பொறித்த பூரி உள்ளிட்ட உணவுகள் காலையில் மட்டுமல்ல மற்ற வேலைகளிலும் தவிர்ப்பது நம்ம உடலுக்கு மிக நல்லது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…