தூக்கத்தில் ஏர்பட்ஸை விழுங்கியவருக்கு காலையில் ஏற்பட்ட விபரீதம்!

அமெரிக்காவில் உள்ள ஒருவர் தூக்கத்தில் ஏர்பட்ஸை விழுங்கியதால் காலையில் அவருக்கு அதிக நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் வசித்து வரக்கூடிய பிராட் கவுதியர் எனும் 38 வயதுடைய நபர் ஒருவர் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது காதுகளில் ஏர்பட்ஸ் மாட்டி கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டு வரே தூங்கியுள்ளார். தூக்க கலக்கத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவர் தனது காதில் மாட்டியிருந்த ஏர்பட்ஸை விழுங்கியுள்ளார். காலையில் எழுந்து தண்ணீர் குடிக்க முற்பட்ட போது மிகவும் சிரமமாகவும் நெஞ்சு வலியும் இருந்ததையடுத்து அவரை மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவர்கள் அவரை சோதித்து கொண்டிருக்கும் பொழுதே தூங்கி எழும் போது தனது ஏர்பட்ஸ் ஒன்று காணவில்லை எனவே ஒருவேளை நான் அதை விழுங்கி இருப்பேன் என மருத்துவர்களிடம் அவர் சந்தேகம் தெரிவித்ததை அடுத்து எக்ஸ்ரே செய்து பார்த்த பொழுது அவரது உணவுக் குழாயில் ஏர்பட்ஸ் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து எண்டோஸ்கோபி சிகிச்சை மூலமாக அவரது உணவுக்குழாயில் இருந்த ஏர்பட்ஸை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மேலும் அவர் நலமாக தற்பொழுது வீட்டிற்கு வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025