இந்த புதுவருடம் முதல் இதனை முயற்சி செய்து பாருங்கள்.! உங்கள் வாழ்வில் நல்லதே நடக்கும்.!

Default Image
  • நம்மில் பெரும்பாலானோர் எனக்கு துன்பம் வேண்டாம். நோய்கள் வேண்டாம் என எதிர்மறை எண்ணங்களை காலையில் பிரார்த்திக்கிறோம். 
  • அதனை தவிர்த்து நல்ல எண்ணங்கள் வேண்டும்,உடல் நலம் வேண்டும் என நேர்மறையாக எண்ணுங்கள் அன்றைய நாள் நடப்பது நல்லதாகவே தெரியும்.

நேற்று வருடம் பிறந்த உடன் பலரும் பலவிதமான உறுதிமொழிகளை மேற்கொண்டிருப்பர். ஆனால், அதனை இரண்டு நாள்கள் கடைபிடித்து விட்டு, அடுத்த மூன்றாவது நாள் தங்களுக்கு அலுத்துபோய்விட்டதே என மீண்டும் பழைய பழக்கவழக்கங்களை தொடர்ந்து மேற்கொள்வது வழக்கம். அதனை தவிர்த்து  காலை எழுந்தது முதல் நல்ல பழக்க வழக்கங்களை செய்ய என்ன கடைபிடிக்கலாம் என்று இப்போது பார்க்கலாம்.

அதாவது, காலையில் விரைவாக எழுந்து குளித்து நம் வேலைக்கோ, தொழிலுக்கோ,  பள்ளிக்கோ செல்லும் போது அதற்கு முன்னரே இறைவனை ஒரு நிமிடமாவது பிரார்த்திக்க வேண்டும். அப்படி நாம் பிரார்த்திக்கும் போது எனக்கு கேட்டதே நடக்கக்கூடாது. கெட்டது விலகிவிட வேண்டும். கெட்ட எண்ணங்கள் எழ கூடாது. பிரச்சினைகள் வேண்டாம் என இறைவனை பிரார்த்திக்கும் போது வேண்டாம் வேண்டாம் என எதிர்மறை எண்ணங்களை காலையிலேயே நம் மனதிற்குள் விதைக்க கூடாது.

அதற்கு பதிலாக நல்ல எண்ணங்களை மனதில் விதைக்க வேண்டும். நல்லது நடக்க வேண்டும், இன்றைய நாள் சிறப்பாக அமைய வேண்டும். என்பதை மட்டும் வேண்டி கொள்ளுங்கள். இது நேர்மறை எண்ணங்களை நமக்குள் விதைக்க உதவும். நாம் வேண்டாம் வேண்டாம் என நமக்கு நடக்காத ஒரு விஷயத்தை காலையிலேயே நம் மனதிற்குள் சொல்லி நம் மனதை குழப்ப கூடாது.

அவ்வாறு அன்று என்ன நடந்தாலும் நம் வேண்டாம் என்று சொன்ன அந்த வார்த்தைகள் நினைவுக்கு வரும். அதனை தவிர்க்க வேண்டும் என வேண்டிக்கொள்வதன் மூலம் நமக்கு அன்று நடக்கும் அனைத்தும் நல்லதாகவே தெரியும். கெட்டது நடந்தாலும் அதில் என்ன நல்லது இருக்கிறது என்பதை மனம் யோசிக்கத் வைக்கும். அந்த எண்ணங்கள் உங்களை அந்த கேட்டதில் இருந்து விடுபட்டு அடுத்து என்ன செய்யலாம் என்பதை சிந்திக்க வைக்கும்.

பலருக்கு நேர்மறை எண்ணங்களையும் எதிர்மறை எண்ணங்களையும் மனதில் வைத்து குழப்பிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் நேர்மறை எண்ணங்களையும் நினைக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்களையும் நினைக்க வேண்டாம். அதற்கு பதிலாக தங்களுக்குப் பிடித்த கடவுளின் நாமத்தை அதாவது, ஸ்ரீராமஜெயம், ஓம் நமச்சிவாயா, ஓம் சரவணபவ என்பது போல தங்களுக்கு விருப்பமான கடவுளின் துதியை நம் மனம் ஒரு நிலைப்படும் போது எதையும் நினைக்காமல் அதனை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அது உங்களுக்கு கெட்டது நடக்க விடாமல் தடுத்துவிடும். மனம் கெட்ட எண்ணங்களை நோக்கி செல்லாது. தானாகவே நேர்மறை எண்ணங்கள் உங்கள் மனதிற்குள் எழ ஆரம்பித்துவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்