காலை உணவுகளை தவிர்ப்பதால் உண்டாகும் பேராபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?!

நமது உடலுக்கு குறைந்தது 7 மணி நேரத் தூக்கம் அவசியம். இரவு சாப்பிட்டுவிட்டு காலை சாப்பாட்டுக்கு இடையில் நமது உடல் சுமார் 11 மணி நேரம் உணவின்றி இருக்கிறது. மீண்டும் காலை முதல் சுறுசுறுப்பாக இயங்க காலை உணவு இன்றியமையாதது. ஆனால், சிலரோ தங்கள் டயட் இருப்பதாக கூறி உடல் எடையை குறைப்பதற்காக காலை உணவுகளை சாப்பிடாமல் சென்று விடுகின்றனர். சிலர் வேலைக்கு நேரமாகிவிட்டது என்று காலை உணவை தவிர்த்து விடுகின்றனர்.
காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். அதனால், நமது உடலுக்கு தேவையில்லாத பல பிரச்சனைகள் வரும். அதில் முதலில் பாதிக்கப்படுவது நமது இருதயம். காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பதால் இதய கோளாறு ஏற்பட்டு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு உண்டு. உயர் ரத்த அழுத்தம் உண்டாகும் அபாயம் இருக்கிறது.
காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பதால் பெண்களுக்கு நீரிழிவு நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவ ஆய்வு கூறுகின்றன.
காலை உணவை தவிர்ப்பதால் எடை குறையும் என நினைத்தால் அது உங்கள் அறியாமை. காலை உணவை தவிர்ப்பதால் எடைகூடும். அதாவது, காலை உணவை தவிர்ப்பதால் நமது உடலில் பசியின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆதலால், மதிய இடைவேளையில் நாம் எப்போதும் சாப்பிடும் அளவிற்கு அதிகமாகவே சாப்பிடுவோம். அதனால் நமது உடலில் தேவையில்லாத கலோரிகள் அதிகரித்து உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
காலை நாம் சுறுசுறுப்புடன் செயல்பட காலை உணவு அவசியம். அதனை தவிர்ப்பதால் மூளைக்கு சரியான சத்துகள் செல்லாமல், அதன் செயல்திறன் குறைவு ஏற்பட்டு நமது அன்றைய செயல் சோம்பேறித்தனமாக மாறிவிடுகிறது.
காலை உணவை தவிர்ப்பதால் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது. மேலும், நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை மிகவும் பாதிக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025