மோரில் இவ்ளோ நன்மைகள் உள்ளதா?! முக அழகைக் கூட்டும் மோர்!
பால் பொருட்களிலேயே மோர் மிகவும் ஆரோக்கியமானது. மோரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக மோரில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது. ஒரு கப் மோரில் 350 கால்சியம் உள்ளது ஆனால் பாலில் 300 கால்சியம் மட்டுமே உள்ளது தயிர் மற்றும் தண்ணீர் உப்பு போன்ற கலக்கி குடித்தால் உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்படாது.
அதிக அளவில் ஏட்பம் வரும் நேரத்தில் மோர் உதவுகிறது. இந்த மோரில் வைட்டமின் B2 உள்ளது உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது. மோரில் உள்ள புரதச்சத்து உடலில் சேரும் கொழுப்புகளின் அளவை குறைக்கும், தினந்தோறும் மோர் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறைபாடு இருக்காது. அதிகளவில் பசி ஏற்படும்பொழுது இந்த மோரானது பசியை தீர்த்து விடும். பால் தயிரை விட மோரில் கொழுப்புக்கள் குறைவு.
இது உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதால் முகம் அழகாக மாறும் மோர் மற்றும் தயிரை பயன்படுத்தி பேசியல் செய்யலாம். இது நமது முகத்தின் தோல்களை மென்மையாகவும் அழகாகவும் ஆக்குகிறது.இதில் லாக்டிக் அமிலம் இருப்பதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளை நீக்குகிறது. இத்தகைய மோரை தினமும் தோறும் ஒருமுறை குடித்தால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். . .