உலகக்கோப்பையில் குறைந்த பந்தில் சதம் அடித்து மோர்கன் சாதனை
நேற்றைய 24-வது லீக் போட்டியில் இங்கிலாந்து , ஆப்கானிஸ்தான் மோதியது. முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 397 ரன்கள் குவித்தது.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் மோர்கன் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடினார்.இப்போட்டியில் 71 பந்தில் 148 ரன்கள் குவித்தார்.அதில் 17 சிக்ஸர் ,4 பவுண்டரி விளாசினார்.
மேலும் குறைந்த பந்தில் உலகக்கோப்பையில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.அதன் படி 57 பந்தில் சதம் விளாசினார்.இதற்கு முன் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் அயர்லாந்து அணியை சார்ந்த கெவின் ஓ பிரையன் என்ற வீரர் 50 பந்தில் சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
50: K O’Brien vs ENG, 2011
51: G Maxwell v SL, 2015
52: AB de Villiers v WI, 2015
57: EoinMorgan v AFG, 2019