அதிர்ச்சி…பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்து- 80க்கும் மேற்பட்டோர் பலி!
சியாரா லியோனில் பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்ரிக்கா நாட்டின் சியாரா லியோன் தலைநகர் ஃப்ரீடவுனில் எரிபொருள் டேங்கர் ஒன்று லாரி மீது மோதியதில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால்,அரசு நடத்தும் சவக்கிடங்கில் 90 க்கும் மேற்பட்ட உடல்கள் கிடைத்துள்ளதாகவும், ஃப்ரீடவுனைச் சுற்றியுள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் சுமார் 100 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dozens of people are feared dead after a gas station exploded on Friday night in the eastern surbub of #Freetown #SierraLeone, rescue efforts continue pic.twitter.com/9QdiR6VIFj
— Ali Hashem علي هاشم (@alihashem_tv) November 6, 2021
வெள்ளிக்கிழமை இரவு நகரின் வெலிங்டன் பகுதியில் உள்ள பரபரப்பான சோய்த்ரம் சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே உள்ள சந்திப்பில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.மேலும்,மக்கள் நிரம்பிய பேருந்து முற்றிலும் எரிந்ததாகவும், அருகில் உள்ள கடைகள் மற்றும் சந்தைக் கடைகள் தீயில் சிக்கியதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
இதனையடுத்து,அந்நாட்டின் ஜனாதிபதி ஜூலியஸ் மாடா பயோ, “துயரகரமான தீ விபத்துகள் மற்றும் பயங்கரமான உயிர் இழப்புகளால் மிகவும் கவலையடைந்தேன.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்யும்” என்று கூறினார்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பல கடுமையான பேரழிவுகளை எதிர்கொண்டது.அந்த வகையில் மார்ச் மாதம், நகரின் சேரிகளில் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 5,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்ததில் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.மேலும்,2017 ஆம் ஆண்டில், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சுமார் 3,000 பேர் வீடற்றவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.