ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி 60,000-க்கும் அதிகமான கோலா கரடிகள் பலி.!

Default Image

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 60000-க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் உயிரிழந்ததாக உலகளாவிய நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 60000-க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் உயிரிழந்ததாக உலகளாவிய நிதி அமைப்பு அறிக்கையில் கூறியுள்ளது . ஆஸ்திரேலியாவின் 59 மில்லியன் ஏக்கரிலான பகுதிகள் காட்டு தீயால் பாதிக்கப்பட்டு ,அதில் 33 பேர் பலியானார்கள் .மேலும் இந்த காட்டு தீயால் 3 பில்லியனுக்கும் அதிகமான வனவிலங்குகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிலும் கங்காருகள் மற்றும் கோலா கரடிகளே அதிகம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2016-ம் ஆண்டின் அறிக்கையின் படி, ஆஸ்திரேலியாவில் 329,000-க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் வாழ்ந்து வந்தது . ஆனால் ஆண்டுதோறும் ஏற்படும் தீ விபத்தால் கோலா கரடிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது . ஏற்கனவே அழியும் நிலையில் இருந்த கோலா கரடிகள் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு மேல் ஏற்பட்ட காட்டு தீயால் 60,000-க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் உயிரிழந்ததாக உலகளாவிய நிதி அமைப்பு தெரிவித்துள்ளது .

தென் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40,000 கோலா கரடிகளும் , விக்டோரியாவில் கிட்டத்தட்ட 11,000 கோலா கரடிகளும் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 8,000 கோலா கரடிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக உலகளாவிய நிதி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அடுத்த 2025-ம் ஆண்டுக்குள் கோலா கரடிகள் அழிந்து விடும் என்று ஜூன் மாதம் என்.எஸ்.டபிள்யூ செய்த ஆய்வில் தெரிய வந்ததை அடுத்து உலகளாவிய நிதி அமைப்பு கோலா கரடிகளின் எண்ணிக்கையை 2050-ம் ஆண்டளவில் இரட்டிப்பாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்