மீண்டும் படையெடுக்கும் கொரோனா.! அதிகரிக்க போகும் உயிரிழப்புகள்.? சீன சுகாதர நிபுணர் எச்சரிக்கை.!

Default Image

அடுத்த 90 நாட்களில் (3 மாதங்கள்) சீனாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும். – சீன சுகாதார நிபுணர் எரிக் ஃபீகல்-டிங். 

உலகையே அச்சுறுத்திய கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தற்போது தான் மக்கள் கொஞ்சம் மறந்து மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளனர். ஆனால், தற்போது சீன சுகாதார நிபுணர் வெளியிட்டுள்ள தகவல் உலக நாடுகளை சற்று அச்சுறுத்தியுளளது.

சீன சுகாதார நிபுணர் எரிக் ஃபீகல்-டிங் கொரோனா தொற்று பற்றி கூறுகையில், ‘  அடுத்த 90 நாட்களில் (3 மாதங்கள்) சீனாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும் எனவும், மில்லியன் (10 லட்சம் ) கணக்கான இறப்புகள் கூட ஏற்படக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே சீனாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என தகவல் அவ்வப்போது வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்