இருசக்கர வாகனங்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள், வகுப்புகளுக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் மாணவிகளை சிறை பிடித்துள்ளனர்.
பயங்கரவாதிகளின் அட்டகாசம் பல இடங்களில் பெருகி வரும் நிலையில், நைஜீரியாவில் உள்ள போகோ ஹராம் பயங்கரவாதிகள் அங்கு வாழும் கிராமத்து மக்கள் மத்தியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பது மட்டுமல்லாமல், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளையும் கடத்தி சென்று அவர்களை தற்கொலைப் படை பயங்கரவாதிகளாகவும் மாற்றிவிடுகின்றன.
இந்நிலையில் நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல், நேற்று முன்தினம் மாலை பள்ளியில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனங்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள், வகுப்புகளுக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் மாணவிகளை சிறை பிடித்துள்ளனர்.
இந்த செயலால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், சில ஆசிரியர்களும் மாணவர்களும் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, அங்கு உள்ள காட்டுக்குள் சென்று மறைந்துள்ளனர். இந்நிலையில், பயங்காரவாதிகள் லாரிகளை வரவழைத்து மாணவிகளை ஏற்றிக் சென்றுள்ளனர்.
இது குறித்து பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டதாகவும், ஜங்கேபே கிராமத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு கடத்தி செல்லப்பட்ட மாணவிகளை மீட்பதற்கான பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நைஜீரியாவின் காட்சினா மாகாணத்தில் டிசம்பர் மாதம் இதே போன்று 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…
டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை…