பாகிஸ்தானில் பருவகால மழையால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!
பாகிஸ்தானில் பருவகாலம் மழையால் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என என்.டி.எம்.ஏ. தெரிவித்துள்ளது
பாகிஸ்தானில் பருவமழை தொடங்கியதிலிருந்து கடந்த இரண்டு மாதங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 239 பேர் காயமடைந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பாக்கிஸ்தான் வருடாந்திர பருவமழை தொடர்பான சம்பவங்களை சமாளிக்க போராடுகிறது. இதனால் உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்களை ஏற்படுத்துகிறது. தற்போது, இந்த பருவமழை ஜூன் மற்றும் ஜூலை முதல் செப்டம்பர் வரை நீட்டிக்கிறது. இதற்கிடையில், நாட்டில் கொரோனோ வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சிக்கும் நேரத்தில் மழைக்காலம் பாகிஸ்தானை வீழ்த்தி வருகிறது.
இந்த வருடம் பெய்த பருவமழை மழையால் 310 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 135 ஆண்கள், 107 குழந்தைகள் மற்றும் 70 பெண்கள் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளது.