கொரோனவால் நாள் ஒன்றுக்கு 1,00,000 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு.. நிபுணர்கள் எச்சரிக்கை!
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதில் அதிகபட்சமாக, அமெரிக்காவில் 27,27,853 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்க மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றாவிட்டால், நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என தொற்றுநோய் மருத்துவர் அந்தோணி பாசி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்காவின் கலிபோர்னியா, டெக்சாஸ், மற்றும் தென் மாகாணங்களில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு நோய் தொற்று கட்டுப்பாத்திற்குள் இல்லை எனவும், இந்த கொரோனா தொற்று மிகவும் மோசமாக மாறக்கூடும் எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, அமெரிக்காவில் சராசரியாக நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலையில், தற்பொழுது அது ஒரு லட்சம் வரை வாய்ப்புள்ளது என தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.