#Ukraine Crisis Live:50 ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களைக் கொன்றதாக உக்ரைன் அறிவிப்பு

Published by
murugan

நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை தடுக்க ரஷ்யா, அந்நாட்டின் மீது போர் தொடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.  இதற்கிடையில், போர் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சி செய்து வந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் , உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

Feb 24, 2022 15:20 (IST)

50 ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களைக் கொன்றதாக உக்ரைன் அறிவிப்பு 

சுமார் 50 ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களைக் கொன்றதாக உக்ரைன் தெரிவித்துள்ளது . ரஷ்யாவின் தரைப்படை பல திசைகளில் இருந்து உக்ரைனுக்குள் நுழைந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Feb 24, 2022 15:00(IST)

ரஷ்ய படைகளுக்கு எதிராக அதிகபட்ச இழப்புகளை ஏற்படுத்துங்கள்

உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் இருந்து உத்தரவு பெற்றுள்ளதாகவும் ,ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அதிகபட்ச இழப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் வலேரி ஜலுஷ்னி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Feb 24, 2022 13:30(IST)

உக்ரேனில் வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிப்பு 

உக்ரைனின்  மத்திய வங்கியின் ஆளுநர், வங்கிகளில் இருந்து ஒரு நாளைக்கு 1,00,000 ஹ்ரிவ்னியா வரை மட்டுமே எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளதாக  ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் ஒரு உக்ரேனிய ஹிரிவ்னியா தோராயமாக ரூ. 2.55 ஆகும்.

  • தங்களது தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் ராணுவ வீரர்கள் சரணைடைந்து வருவதாக ரஷ்யா இராணுவம்  தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
  • உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரால் கச்சா எண்ணெய் விலை 103 டாலராக உயர்வு.
  • உக்ரைனில் 100க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் சிக்கித் தவிப்பு.
  • நட்புநாடான பெலாரஸ் வழியே உக்ரைனுக்குள் நுழையும் ரஷிய தரைப்படைகள்.
  • இந்தியா நடுநிலை வகிக்கும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
  • ரஷ்ய அதிபர் புட்டினிடம் இந்தியா பேச வேண்டுமென உக்ரைன் தூதரகம் கோரிக்கை.
  • உக்ரைனில் நிலைமை மோசமாக உள்ளது. இந்தியர்கள் உக்ரைனில் எங்கு இருந்தாலும் பாதுகாப்பாக இருங்கள் என இந்திய தூதரகம் எச்சரிக்கை.
  • உக்ரைனின் லுகான்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
  • ரஷ்யாவின் தாக்குதலால் தங்கள் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எங்களுக்கும், உக்ரைனுக்கும் இடையே நடக்கும் போரில் யாரேனும் தலையிட்டால் அவர்கள் இதுவரை சந்திக்காத வரலாறு காணாத மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார்.
  • உக்ரைன் மீது போர் தொடங்கிய ரஷ்யாவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago