எத்தியோப்பியாவில் இனப்படுகொலையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

எத்தியோப்பிய நாட்டின் மேற்குப் பகுதியில் சமீபத்தில் இனரீதியான படுகொலையில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்கா எத்தியோப்பிய நாட்டின் மேற்குப் பகுதியில் சமீபத்தில் இனரீதியான படுகொலையில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு ஊடகம் கூறுகையில், பெனிஷங்குல் – குமுஸ் பிராந்தியத்தின் மெட்டகல் மண்டலத்தில் நேற்று அதிகாலை இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக சாட்சிகளை மேற்கோள் காட்டி ஒரு தனி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, அந்நாட்டு பிரதமர் அபி அகமது அப்பகுதிக்குச் சென்று இதற்கு முன் நடந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதிக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்து பேசிய ஒரு நாள் கழித்து, இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 80க்கும் மேற்பட்ட இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில் தேசிய ஒற்றுமையை வளர்க்க அபி அகமது முயற்சிப்பதால் இனப் பதட்டங்கள் ஒரு பெரிய சவாலாக கருதப்படுகிறது.

நேற்று மாலை தொலைதூர கிராமங்களில் சிலர் சுற்றிவளைத்து மக்களுக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 200க்கு மேல் என்று அம்ஹாரா அரசியல் கட்சியின் தேசிய இயக்கத்தின் தலைவர் பெலட் மொல்லா தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் குமுஸ் போராளிகள் என்று பெலட் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியான பெனிஷங்குல்-குமுஸ் செழிப்பு கட்சி ஒரு அறிக்கையில் ஆயுதக் கொள்ளைக்காரர்கள் இந்த தாக்குதலை செய்துள்ளதாகக் கூறியுள்ளது.

எத்தியோப்பியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 2வது இனக்குழு அம்ஹாராக்கள். இப்பகுதியில் உள்ள அம்ஹாராக்கள் மீது சமீபத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேற்கு ஒரோமியா பிராந்தியத்தில் நவம்பர் 1-ம் தேதி நடந்த ஒரு கிளர்ச்சி தாக்குதலில் குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்திருந்தது. இதேபோன்ற தாக்குதல்களைத் தொடர்ந்து 300 க்கும் மேற்பட்ட மக்களை இடமாற்றப்பட்டடுள்ளது என மனித உரிமைகள் ஆணையம் கவலையுடன் தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

3 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

3 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

4 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

5 hours ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

6 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

7 hours ago