கொரோனா காரணமாக 100 கோடிக்கு அதிகமான மாணவர்கள் பாதிப்பு – ஐ நா
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் 1.84 கோடியை கடந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டன.
இதனால் 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்தார். குறைந்தது 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தங்களது தொடக்க கல்வியை இழந்துள்ளனர் என்று கூறினார்.
இதனால் ஒரு தலைமுறையே பேரழிவை எதிர் கொள்கிறது என்று அவர் தெரிவித்தார்.