அதிக கவனம் தேவை,மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும்- உலக சுகாதார அமைப்பு
ஊரடங்கை அவசர கதியில் விலக்கி கொள்ளக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.தற்போதைய நிலவரப்படி 38,22,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 2,65,084 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட 38,22,989 பேரில் 13,02,995 பேர் குணமடைந்து உள்ளனர். உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 12,63,183 பேர் பாதிக்கப்பட்டு, 74,807 பேர் பலியாகியுள்ளனர்.இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.அதிலும் குறிப்பாக கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் உலகில் உள்ள பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு சில நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்வு செய்து வருகின்றது.அதற்கு முக்கிய காரணம் பல நாடுகள் பொருளாதார ரீதியாக கடும் சரிவை சந்தித்துள்ளது.இதனால் ஒரு சில நாடுகள் ஊரடங்கை நீக்குவதாக அறிவித்து வருகிறது.
இதற்கு இடையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் கூறுகையில்,உலக நாடுகள் கொரோன பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும். ஊரடங்கை அவசர கதியில் விலக்கி கொள்ளக் கூடாது.ஊரடங்கை தளர்த்திய பின்னர் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இல்லையென்றால் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.