நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசளித்த “மூக்குத்தி அம்மன்” பட தயாரிப்பாளர்.!

Default Image

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக ஆடை மற்றும் இனிப்புகளை மூக்குத்தி அம்மன் பட தயாரிப்பாளரான இசாரி கணேஷ் வழங்கி உதவியுள்ளார் .

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் டாக்டர் இசாரி.கே. கணேஷ் .  வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவன தலைவரான இவர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் அதிபராக உள்ளார் .  மேலும் தென்னிந்திய கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள இவர் பல நற்பணிகள் செய்து வருகிறார்  .ஊரடங்கு நேரத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய இவர் தறீபோது நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியுள்ளார் .

நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி இசாரி கணேஷ் உதவியுள்ளார் . வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர் . இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 14-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்