இந்த மாதம் எப்படி இருக்கு!? மேஷம்-கடகம் வரை ராசிகளுக்கு பலன்கள் இதோ..!

Default Image

இம்மாதம் நமக்கு  எப்படி இருக்கிறது.அவ்வாறு சுமாராக இல்லையென்றால் என்ன பரிகாரம் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ளலாம். 

மேஷம்:

இந்த மாதம் முழுவதும் மனதினுள் இருந்து வந்த பயம் நீங்கும்.தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பிறக்கும். சகோதர- சகோதரி வழியில் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார். பிரச்சினைகள் வராமல் தடுக்க பொறுமையை கடைபிடிக்கலாம். வியாபாரம் செய்கின்ற மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமுகமான சூழ்நிலையில் பணியாற்றுவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். படிப்பில் மாணவர்கள் ஆர்வம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடிவரும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் தான். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கணவன் மனைவியிடையே சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டு அப்பொழுதுதே மறையும். நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம்: ஹயக்ரீவர்,பரிகாரம்: சனிக்கிழமைகளில்  விநாயகருக்கு அபிஷேகம் செய்வது நல்ல பலனைத் தரும்.

ரிஷபம்:

இன்றைய மாதம் நல்ல பலன்கள் நடைபெறும் மாதமாக அமைய உள்ளது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிடைக்கும். திட்டமிட்ட காரியம் எந்தவொரு தடையின்றி நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள் மேலும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிட மாற்றம் தொடர்பாக விண்ணப்பதவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக  பயணங்களை மேற்கொள்வீகள். மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும் என்பதால் தைரியமாக பயணம் மேற்கொள்ளலாம். மாணவர்களின் கல்வி சீராக இருக்கும். வழக்குகள் தொடர்பான விவகாரங்கள் இம்மாதத்திற்குள் அதில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வழிபட வேண்டிய தெய்வம்: லக்ஷ்மி நரசிம்மர் பரிகாரம்: துளசி மாலை சாற்றி அவரை வழிபட்டு வாருங்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதன் மூலம் நல்ல பலன் களை பெறலாம்.

மிதுனம்:

மாதம் முழுவதும் குறைகள் எல்லாம் களையும் ஒரு மாதமாகவே அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அன்றாட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு மிளிர்வீர்கள்.வியாபாரத்திக் நல்ல முன்னேற்றம் காணப்படும்.  புதிய தொழில் முயற்சிகள் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களின் கல்வி மிகச்சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் வசித்துக் கொண்டு இருக்கும் மிதுனராசிக்காரர்கள் இம்மாதத்தில் தாய் நாடு திரும்புவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர் பரிகாரம்: தினமும் கற்பக விநாயகரை வழிபடுவது சிறப்பானது.

கடகம்:

மாதம் முழுவதும் விழிப்போடு செயலை மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் வீண் செலவுகள் செய்வதை தவிர்க்கலாம்.. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மாணவர்கள் கல்வி கவனத்தோடு படிக்க வேண்டும் புதிய தொழில் வாய்ப்புகள் வெற்றி தரும்.இறை வழிபாடுகளில் பெண்களுக்கு  ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அதீத அன்பு அதிகரிக்கும். சகோதர வழியே ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வர். வழிபட வேண்டிய தெய்வம்: அம்பாள் பரிகாரம்: வெள்ளியன்று அம்பாளை வழிபடுவது நல்லது.  முடிந்த அளவிற்கு நெய் தானம் செய்து நல்லது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review