இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது தி க்ரே மேன், மற்றும் அத்ராங்கி ரே ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43-வது படமான மாறா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
தமிழா தொடர்ந்து நடிகர் தனுஷ் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதாவது, தனுஷ் நடிக்கும் முதல் தெலுங்கு படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில்உருவாகவுள்ளது.
இந்த நிலையில், நேற்று நடிகர் தனுஷ் தனது 38 வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இளைய சூப்பர் ஸ்டார் என்று அடைமொழி வைக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியிட்டுள்ளது. தொடரி படத்தின் போது தனுஷை இளைய சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கூறிவந்தனர். அதனை தொடர்ந்து அசுரன் படம் வெளியாகும் போது அசுரன் தனுஷ் என்றும் கூறிவந்தனர் எனப்து குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…