சீனாவின் மிகப்பெரிய ஆய்வகங்களில் ஒன்றான யிஷெங் பயோ பார்மா (Yisheng Biopharma) கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி எலிகள் மற்றும் முயல்களில் பரிசோதிக்கப்பட்டு நல்ல பலன்களைப் பெற்றுள்ளது என யிஷெங் பயோ பார்மாவின் தலைவர் ஜாங் யி கூறியுள்ளார்.
அடுத்த கட்டமாக குரங்குகளில் தடுப்பூசியை பரிசோதிப்பது என்றும், உலகெங்கிலும் உள்ள மருந்து நிறுவனங்கள் கொரோனா நோய்க்கு எதிரான தடுப்பூசிகளைப் பரிசோதித்து வருவதால், குரங்குகளில் விலை மிகவும் உயர்ந்ததாக ஜாங் யி கூறுகிறார்.
ஆய்வகங்களில் குரங்குகளுக்கு பெரும் தேவை உள்ளது. பொதுவாக, ஒரு குரங்குக்கு 10,000 முதல் 20,000 யுவான்(yuan) வரை செலவாகும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இதற்கு 1,00,000 (yuan) யுவான் (இந்திய மதிப்பில் 10,00,000) செலவாகிறது. ரீசஸ் குரங்குகள் மற்றும் சினோல்மோக்குகளைச் சேர்ந்த குரங்குகள் பொதுவாக மருந்து சோதனைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
விலங்குகளுக்கான தடுப்பூசி பரிசோதனையை முடித்த பின்னர் மருத்துவ பரிசோதனைகளுக்கு 180 மில்லியன் டாலர்களை செலவிட நிறுவனம் தயாராக உள்ளது. எங்களுக்கு 10 உற்பத்தி மையங்கள் உள்ளன என ஜாங் யி கூறினார்.
அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் மருத்துவ பரிசோதனைகளை ஒரு அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக முதல் தடுப்பூசியை தயாரிப்பதற்கான போட்டியில் உள்ளனர். ஆனால், அது எங்களுடைய குறிக்கோள் அல்ல, தரமான தடுப்பூசி தயாரிப்பது என ஜாங் கூறினார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…