சீனாவில் புதிதாக மங்கி பி வைரஸ் தொற்று..!ஒருவர் உயிரிழப்பு..!

சீனாவில் புதிதாக மங்கி பி வைரஸ் என்ற கால்நடை நோய் தொற்றிற்கு ஒருவர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் வூஹான் நகரத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கிலும் பரவி பல சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது சீனாவில் புதிதாக கால்நடை நோய் தொற்றான குரங்கு பி வைரஸ் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பெல்ஜிங்கை சேர்ந்த 53 வயதான கால்நடை மருத்துவர் ஒருவருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் மனிதரல்லாத விலங்குகளை ஆராய்ச்சி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். மார்ச் மாத தொடக்கத்தில் இரண்டு இறந்த குரங்குகளை பிரித்து ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்விற்கு அடுத்த மாதத்தில் இவருக்கு வாந்தி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி மே மாதத்தில் 27 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இதற்கு முன்னர் சீனாவில் இந்த நோய்த்தொற்று ஏற்படவில்லை என்றும் இதுவே மனிதருக்கு ஏற்பட்ட முதல் குரங்கு பி வைரஸ் தொற்று என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருடன் தொடர்பிலிருந்த குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் இவர்களுக்கு உறுதியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024