மகப்பேறு கால பிரச்சனைகளை போக்கும் பனங்கற்கண்டு…..!
மகப்பேறு கால பிரச்சனைகளை போக்கும் பனங்கற்கண்டு.
பனங்கற்கண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். இது பனைமரத்தின் வெள்ளத்திலிருந்து உருவாகக் கூடிய ஒன்றாகும். முற்றிலும் சுத்தப்படுத்தபடாத கெட்டியான கருப்பு நிற வெல்லம் கருப்பட்டி என்று கூறுகின்றனர். அதேசமயம் சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களை பனங்கற்கண்டு என்று கூறுகின்றனர்.
இந்த பனங்கற்கண்டு நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. அப்படி இந்த பனங்கற்கண்டில் என்னென்ன மருத்துவகுணங்கள் உளது என்பது பற்றி பார்ப்போம்.
சளி
உடலில் இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சளி பிரச்சனை அதிகமானோருக்கு காணப்படுகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். அதோடு தொண்டை புண், தொண்டை வலி, உடல் உஷ்ணம், சுரம் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை ஆக்குகிறது.
கர்ப்பிணி பெண்
முக்கியமாக இந்த பனகற்கண்டு, மகப்பேறு காலங்களில் பெண்களுக்கு ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் போன்ற பிரச்சினைகளை போக்குகிறது. மேலும் இது ரத்த ஓட்டத்தை சீராக்கி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.
பற்கள்
பனங்கற்கண்டில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுவதால், இது பற்களுக்குத் தேவையான உறுதியை அளிப்பதோடு, ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை தடுத்து, பற்களின் பழுப்பு நிறத்தை போக்குகிறது.