பிரபல நடிகையிடம் பணம் கேட்டு மிரட்டல்.! 4 இளைஞர்கள் கைது.!

பிரபல நடிகையான பூர்ணாவிடம் 1 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கேரளாவை சேர்ந்த 4 இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2008ம் ஆண்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூர்ணா. அதனையடுத்து தமிழ் உட்பட பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக சூர்யாவின் காப்பான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஏ. எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி என்ற ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த சரத், அஷ்ரப், ரபீக் மற்றும் ரமேஷ் ஆகிய நான்கு இளைஞர்கள் பூர்ணாவிடம் ஒரு லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், இல்லையென்றால் பூர்ணா அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவோம் என்று மிரட்டியதோடு, அவரது புகைப்படங்களை எடுக்க வீட்டின் அருகே வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பூர்ணாவின் தாயார் போலீஸில் புகார் செய்ததை அடுத்து நால்வரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நடிகையிடமே பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025