“பணம் லா பிரச்சனை இல்ல”….. மிரட்டும் சூரரைப் போற்று டிரைலர்..!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். மேலும் ஜீவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த திரைப்படம் விமானத்தை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை வைத்து மையமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். இந்த திரைப்படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் நேரடியாக அக்டோபர் 30ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாவதாக படக்குழு அறிவித்திருந்தனர்.
ஆனால் விமானப்படையின் தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தினால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழை படக்குழுவினர் பெற்றதை தொடர்ந்து வருகின்ற நவம்பர் 12ம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படக்குழுவினர் இந்த சூரரைப்போற்று திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.
#SooraraiPottruTrailer ????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????@Suriya_offl Thalaivaaaa ♥️♥️♥️???????????????????? pic.twitter.com/VIUKGY9h8d
— BHUVAN SURIYA????ˢᵒᵒʳᵃʳᵃⁱ ᵖᵒᵗᵗʳᵘ (@BHUVAN_SURIYA) October 26, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025