Morning special: செட்டிநாட்டு ஜவ்வரிசி ஊத்தப்பம் சுவைத்தது உண்டா.?
கலாச்சாரம் நிறைந்த செட்டிநாட்டு சமையல் உலகளவில் புகழ் பெற்றது அனைவருக்கும் தெரிந்ததே, அதிலும் வீட்டுத் தொழில்நுட்பமான சமைக்கும் கலை நூதனமானது.
செட்டிநாட்டு ஜவ்வரிசி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை:
இட்லி அரிசி – 5 கப்
உளுந்து – ஒரு கப்
ஜவ்வரிசி – கால் கிலோ
வெங்காயம் – 2
கடுகு – தேவையான அளவு.
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
எண்ணெய் – தேவையான அளவு.
உப்பு – தேவையான அளவு
எளிதான செய்முறை:
அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்வைத்து உப்பு சேர்த்து கொள்ளவும். மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும்.
அடுத்ததாக, வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும். இதனையடுத்து தோசைக் கல்லைச் சூடாக்கி, மாவை கெட்டியாக ஊற்றி, எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து காரச் சட்னியுடன் பரிமாறவும்.
சுவையான செட்டிநாட்டு ஜவ்வரிசி ஊத்தப்பம் ரெடி…..