அம்மாவான பிக்பாஸ் புகழ் ரம்யா.! கணவன் மற்றும் குழந்தையுடனான அழகிய புகைப்படம்.!

பிக்பாஸ் பிரபலமும், பாடகியுமான என். எஸ். கே. ரம்யா மற்றும் நடிகர் சத்யா தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளதை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் என். எஸ். கே. ரம்யா. தனது குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு நேர்மையாக விளையாடியவர் என்ற பெருமையை பெற்றார் ரம்யா. கடந்த வருடம் இவர் நடிகர் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளது. கணவன் மற்றும் குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனையடுத்து பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025