தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை பிரபல நடிகரான மோகன் லால் கைப்பற்றியுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான கேரள ரிலீஸ் உரிமையை பிரபல நடிகரான மோகன் லால் கைப்பற்றியுள்ளார். இதனை அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில் உறுதிப்ப டுத்தியுள்ளார். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை மோகன் லால் தான் வாங்கி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தத்தக்கது.
இந்த கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…