கயானா நாட்டின் ஜனாதிபதியாக முகமது இர்பான் அலி பதவியேற்பு.!
கயானா நாட்டின் புதிய ஜனாதிபதியாக முகமது இர்பான் அலி பதவியேற்றுள்ளார்.
கயானா நாட்டின் ஜனாதிபதி பதவிக்கான 2020-ம் ஆண்டிற்கான தேர்தல் மார்ச் 2-ம் தேதி நடைபெற்றது. தற்போது கயானா நாட்டின் ஜனாதிபதியான மக்கள் முற்போக்கு கட்சியின்(பிபிபி) உறுப்பினரான முகமது இர்பான் அலி ஆகஸ்ட் 2-ம் தேதி பதவி ஏற்றுள்ளார்.
இவர் ANPU-AFC-ன் உறுப்பினரான டேவிட். ஏ. கிரெஞ்சர் உடன் போட்டியிட்டு 233,336 வாக்குகளை பெற்று தேசிய சட்டமன்றத்தில் உள்ள 65 இடங்களில் 33 இடங்களை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். மேலும், டேவிட் 217,920 வாக்குகளை பெற்று 31 இடங்களை பெற்றுள்ளார்.