ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் 5 விக்கெட்டை பறித்த முகம்மது அமீர்
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதியது.இப் போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 307 ரன்கள் குவித்தது.பின்னர் இறங்கிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 266 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் முகம்மது அமீர் பல சாதனை புரிந்தார்.10 ஓவர் வீசி அதில் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டையும் பறித்து உள்ளார்.அந்த 30 ரன்னில் ஒரு பவுண்டரி கூட போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மேலும் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
- உலககோப்பை போட்டிகளில் 4 -வது சிறந்த பந்துவீச்சளராக இடம் பிடித்து உள்ளார்.
- நடப்பு உலககோப்பை போட்டியில் சிறந்த பந்துவீச்சளராக இடம் பிடித்து உள்ளார்.
- உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிகளில் 4 -வது சிறந்த பந்துவீச்சளராக இடம் பிடித்து உள்ளார்.
- ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிகளில் சிறந்த 6-வது பாகிஸ்தான் பந்துவீச்சளராக இடம் பிடித்து உள்ளார்.