எனக்கு காயம் இல்லை ! கிரிக்கெட் வாரியத்தின் சதியால் வெளியேற்றப்பட்டேன்! கண்ணீர் மல்க கூறிய முகம்மது ஷசாத்
உலகக்கோப்பை போட்டி கடந்த மாதம் 30 -ம் தேதி இங்கிலாந்து Vs தென் ஆப்ரிக்கா அணிகள் மோதி உலக்கோப்பையின் முதல் போட்டியை தொடக்கி வைத்தனர். அன்று முதல் இன்று வரை உலக்கோப்பை போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
நடப்பு உலககோப்பையில் பரிதாபமான நிலையில் உள்ள அணிகளில் தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அடங்கும் காரணம் இரு அணிகளும் விளையாடிய அனைத்து போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்து உள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக முகம்மது ஷசாத் கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் காயம் அடைந்தார். ஆனால் அந்த காயத்தையும் பொருட்படுத்தாமல் இரண்டு போட்டிகளில் விளையாடினர்.
ஆனால் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன் முகம்மது ஷசாத்விற்கு காயம் அதிகமாகி விட்டதால் உலக்கோப்பை தொடரில் இருந்து விலகி விட்டார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இந்நிலையில் முகம்மது ஷசாத் ஒரு குற்றச்சாற்றை எழுப்பி உள்ளார்.அவர் கூறுவது,” நான் விளையாட நல்ல உடல் தகுதி இருந்தும்.என்னை எப்படி உடல் தகுதி இல்லை என கூறி தகுதி இழப்பு செய்தார்கள் என்று தெரியவில்லை.கிரிக்கெட் வாரியத்தில் எனக்கு எதிராக சதி திட்டம் திட்டுகிறார்கள்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் எனக்கு பதில் வேறு ஒரு மாற்று வீரர் அறிவிக்கப்பட உள்ளார்கள் என்பது கேப்டன், டாக்டர் இவர்களுக்கு மட்டுமே தெரியும். பயிற்சியாளருக்கு கூட பிறகுதான் தெரியும்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு பயிற்சி முடித்து விட்டு எனது செல்போனை பார்த்த பிறகுதான் எனக்கே தெரியும் நான் அணியில் இருந்து விலகியது.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை எதும் கேட்காமல் வெளியே அனுப்பிவிட்டனர் . மேலும் என்னிடம் எந்தவித கலந்துரையாடல் செய்யவும் இல்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.