இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நீக்கம்? பி.சி.சி.ஐ. அதிரடி?
பி.சி.சி.ஐ.யின் ஊதிய ஒப்பந்தத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவரது மனைவி பல்வேறு புகார்களை கூறியதன் விளைவாக, அவர் பெயர் நிராகரிக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முகமது ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், இதை தட்டிக் கேட்டால் அடித்து துன்புறுத்துவதாகவும் அவரது மனைவி ஹாசின் ஜஹான், பேஸ்புக் பக்கத்தில் ஆதாரங்களுடன் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தில் முகமது ஷமியின் பெயர் இடம்பெறவில்லை.
அவரது மனைவி கூறிய புகார்களே இதற்கு காரணம் என்றும், புகார்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில் மட்டுமே ஷமியின் பெயர் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்ற ஆண்டு ஒப்பந்தத்தில் அவர் பி கிரேடு என்ற நிலையில் இடம்பெற்றிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.