அட போங்கப்பா இட்லி சாம்பாருக்கு ஜி.எஸ்.டி வரி விதித்தவர் தான் மோடி- ஆர்.எஸ் பாரதி அதிரடி
- இட்லி சாம்பாருக்கு ஜி.எஸ்.டி வரி விதித்தவர் தான் மோடி.
திமுக அமைப்பு செயலாளர்ஆர்.எஸ்.பாரதி அவர்கள் அரக்கோணம் பகுதியில் பிரகாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் மிகப்பெரும் தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இறந்துவிட்டனர்.
ஆனால், இத்தேர்தலில் பணத்திற்கு ஓட்டு விற்காமல் வலிமையான ஜனநாயகத்தை உறுதி செய்ய அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி வரி என்ற பெயரில் பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளால் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், இட்லி, சாம்பாருக்கும் ஜி.எஸ்.டி வரி விதித்தவர் தான் மோடி. நூலுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பால் நெசவு தொழில் முடங்கி நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது தெரிவித்துள்ளார்.