நியூஸிலாந்து தாக்குதல்; மோடி கடும் கண்டனம்!!
- அவன் நடத்திய துப்பாக்கி சூட்டை தனது வலைதள பக்கத்தில் லைவ் மூலம் அனைவருக்கும் காண்பிக்கவும் செய்துள்ளான்.
- பயங்கரவாத செயலுக்கு எப்போதும் இந்தியா எதிராக நிற்கும்
நியூசிலாந்து தலைநகர் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் என்ற மசூதிக்குள் பயங்கரவாதி ஒருவன் காரில் நவீன ரக துப்பாக்கியுடன் வந்தான்.
தனது கையில் இரண்டு துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு மசூதிக்குள் சென்ற அவன் அங்கு தொழுதுகொண்டிருந்தவர்கள் அனைவரையும் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொலை செய்தான்.
காலை நிலவரப்படி 7 பேர் இறந்ததாக தகவல் வந்த நிலையில் தற்போது வரை 52 பேர் இறந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உச்சகட்டமாக, அவன் நடத்திய துப்பாக்கி சூட்டை தனது வலைதள பக்கத்தில் லைவ் மூலம் அனைவருக்கும் காண்பிக்கவும் செய்துள்ளான்.
இந்நிலையில், இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூஸிலாந்து நாட்டு பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “பயங்கரவாத சம்பவம் அறிந்து அதிர்ச்சிக்குள்ளானேன், இதற்கு எனது ஆழ்ந்த இரங்கல். மேலும், பயங்கரவாத செயலுக்கு எப்போதும் இந்தியா எதிராக நிற்கும்” என குறிப்பிட்டார்.