பெண்களின் சேமிப்பை காலி செய்து விட்டார் மோடி : குஷ்பூ
- பெண்களின் சேமிப்பை காலி செய்து விட்டார் மோடி.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரிஸ்வான் அர்ஷத்தை ஆதரித்து நடிகையும் காங்கிரஸ் பேச்சாளருமான குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், மோடி ஒரேநாள் இரவில் பணமதிப்பு நீக்கத்தை அறிவித்ததன் மூலம் பெண்களின் சேமிப்பை காலி செய்துவிட்டார் என்றும், 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த பிறகு, ஏடிஎம் வாசலில் காத்திருந்த 100-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழந்தனர் என்றும் விமர்சித்துள்ளார்.