அமெரிக்காவின் ஹூஸ்டன் என்.ஆர்.ஜி கால்பந்து மைதானத்தில் ஹவுடி மோடி எனும் நிகழ்ச்சி அமெரிக்க வாழ் இந்தியர்களின் சார்பில் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் சிறப்பு விருந்தினராக அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் மோடியின் பேச்சை கேட்பதாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மோடி பேசுகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் என்றும் உற்சாகத்துடனும் ,துடிப்புடனும் ,ஆளுமையுடனும் செயல் படக்கூடியவர் என்று கூறியுள்ளார். ட்ரம்ப் ஒரு சிறந்த மனிதர் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியவர் என்று மோடி புகழாரம் சூட்டினார்.
இவர் அமெரிக்கா நாட்டிற்காகவும் உலகத்திற்காகவும் பல விஷயங்களை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் மிகவும் எளிமையாகவும், நட்புடனும் பழக்க கூடியவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசும் போது , மோடியின் செயலை திட்டத்தால் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்றுள்ளார்கள் என ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அமெரிக்க மருத்துவர்கள் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். தீவிரவாதத்தை ஒழிக்க இந்திய அமெரிக்க ராணுவங்கள் இணைந்து செயல் படும் என்று கூறியுள்ளார். விண்வெளித்துறையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.
இந்தியாவில் நடக்கும் என்பிஏ கூடை பந்து போட்டியாளர்களை நேரில் வந்து பார்ப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.இந்தியாவில் 30 கோடி மக்களின் வறுமையை போக்கியுள்ளார் மோடி என்று அவர் கூறியுள்ளார். இந்தியர்கள் அமெரிக்காவில் வாழ்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அமெரிக்கா அடைவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 51 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பு குறைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். என்னுடைய நேர்மையான நண்பரை வரவேற்பதில் நான் மகிழ்ச்சில் அடைகிறேன் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடன் இந்த விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…