ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்..!
இன்று காலை ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள வடகிழக்கு காபூலில் இன்று காலை 11.20 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது காபூலில் இருந்து 69 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும், இது பூமிக்கு அடியில் 92 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பாதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.