சாய்ந்துவிட்டது திராவிட சிகரம்..எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்…என்னச்சொல்லி தேற்றுவேன்! இப்படிக்கு கண்ணீருடன் ஸ்டாலின்

Default Image

தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் பழம்பெரும் அரசியல் தலைவராக வலம்வந்த பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

அவருடைய மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகனின் மறைவிற்கு தான் எழுதிய உருக்கமான இரங்கல் கவிதை கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.அந்த கவிதையில் முக ஸ்டாலின்

Image

திராவிட சிகரம் சாய்ந்து விட்டது

சங்கப்பலகை சரிந்து விட்டது

இனமான இமயம் உடைந்து விட்டது 

எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்து விட்டார்

என்ன சொல்லித் தேற்றுவது?எம் கோடிக்கணக்கான கழக குடும்பத்தினரை?

பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர்

முத்தழிழறிஞர் கலைஞரைத் தாங்கும் நிலமாய் இருந்தவர்

எனது சிறகை  நான் விரிக்க வானமாய் இருந்தவர்

என்ன சொல்லி நானே தேற்றிக் கொள்வது?

தலைவர் கலைஞர் அவர்கள் என்ன வளர்த்தவர்

பேராசிரியர் பெருந்தையோ என்னை வளர்பித்தார் 

எனக்கு உணர்வு உயிரும் தந்தவர் கலைஞர்

ஊக்கமும் உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர்

இந்த நான்கும் என்னை இந்த இடத்தில் இருத்தி வைத்துள்ளது.

எனக்கு அக்காள் உண்டு அண்ணன் இல்லை,பேராசிரியர் தான் என் அண்ணன்

Image

எனக்கு அத்தை உண்டு பெரியப்பா இல்லை பேராசிரியர் பெருந்தகையே பெரியாப்பாவாக ஏற்று வாழ்ந்தேன்

அப்பாவை விட பெரியப்பாவிடம் நல்லப்பெயர் வாங்குவது தான் சிரமம்

ஆனால் நானோ பெரியாப்பா பேராசிரியரால் அதிகம் புகழப்பட்டேன்

அவரே  என்னை முதலில் கலைஞருக்கு பின்னால் தம்பி ஸ்டாலினே தலைவர் என்று அறிவித்தார்

எனது வாழ்நாள் பெருமையை வழங்கிய பெருமகன் மறைந்தது என் இதயத்தை  பிசைகிறது!

அப்பா இறந்த போது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன்!

இன்று பெரியப்பாவும் மறையும் போது என்ன சொல்லி என்னை தேறுதல் கொள்வேன்?

பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையோடு இருந்தேன் இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன் ?

இனி யாரிடம் பாராட்டு பெறுவேன்? என்ன சொல்லி நானே தேறுதல் கொள்வேன்?

பேராசிரியர் பெருந்கையே நீங்கள் ஊட்டிய இனப்பால்-மொழிப்பால்-கழகப்பால் இம்முப்பாலும் இருக்கிறது.

Image

அப்பால் வேறு என்ன வேண்டும் உங்கள் அறிவொளியில் எங்கள் பயணம் தொடரும் பேராசிரியர் பெருந்தகையே!! 

கண்ணீருடன்

மு.க ஸ்டாலின்

 

image

 

என்று உருக்கத்தோடு இந்த கடித்ததை எழுதியுள்ளர் மு.க ஸ்டாலின் மேலும் அரசியலில் பழம் பெரும் தலைவர் மறைவினையோட்டி அவருடைய மறைவுக்கு ப புதுச்சேரி முதல்வல் நாராயணசாமி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் என பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்