வீட்டு வாசலில் இருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
திருவாரூரில் திமுக பிரமுகர் திருமண விழாவுக்கு செல்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது வீட்டு முன் நின்ற மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் வந்துள்ளார். அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகளை மேற்பார்வையிட்டார். நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருவாரூர் வரும் வழியில் தஞ்சை சென்று மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் உபயதுல்லா இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிவிட்டு வந்தார்.
திருவாரூர் குளம் : அதன் பிறகு, நேற்று திருவாரூரில் அரசு பணிகளை ஆய்வு செய்து விட்டு, அதன் பிறகு திருவாரூர் கமலாலயம் குளத்திற்கு சென்றார். அந்த குளமானது தனது பால்ய நினைவுகளை நினைவூட்டுவதாக கூறி தனது டிவிட்டர் பக்கத்தில் அது குறித்த புகைப்படங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.
மனுக்கள் : இதனை அடுத்து இன்று திமுக பிரமுகர் வீட்டு இல்லதிருமண விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் இருந்து புறப்படுகையில் வீட்டு வாசலில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய அரசு உதவிகளை மனுக்களாக எழுதி வைத்து இருந்ததை கண்டு அதனை பெற்று கொண்டார்.