நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த சிறுவர்களை அமைச்சர் சீனிவாசன் , “டேய் ,வாடா வாடா செருப்பை கழற்றுடா,” என்று அழைக்கவே உடனே அங்கே வந்த இரண்டு சிறுவர்களில் ஒருவன் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டான்.பின்னர் அமைச்சர் அருகில் இருந்த உதவியாளர் செருப்பை எடுத்து ஓரமாக வைத்தார்.அமைச்சருடன் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இந்த சம்பவம் நடக்கும் போது உடன் இருந்தனர்.
இந்நிலையில் அமைச்சரின் இந்த செயல் பெரும் சர்ச்சையாக மாறியது.இதற்கு பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.கண்டங்கள் வலுக்கவே இது குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்தார் அந்த விளக்கத்தில், என் பேரனாகவே அந்த சிறுவனை கருதி செருப்பை கழட்டிவிடுமாறு கேட்டேன்.கழற்ற சொன்னதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.
இவ்வாறு அவர் விளக்கம் அளித்த போதிலும் பல தரப்பில் இருந்து அவருக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் நடிகர் பார்த்தீபன் தன் ட்விட்டர் பக்கத்தில் மந்திரிச்சி விடப்பட்ட செருப்பு ! கல்…. (ராமர்) கால் பட்டு அகலிகை ஆனது – திண்டுக் கல்… கால் பட்ட செருப்பின் அகலாத Buckle, பாவப்பட்ட சிறுவன் கை பட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டது என்று விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…