மந்திரித்து விடப்பட்டசெருப்பு: திண்டுக்..கல் கால் பட்டசெருப்பு சிறுவனிடம் மாட்டியது..! பார்த்தீபன் பளீர்

Default Image
  • அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக வலுக்கும் செருப்பை கழட்ட சொன்ன விவகாரம்
  •  திண்டுக் கல்… கால் பட்ட செருப்பின் அகலாத Buckle, பாவப்பட்ட சிறுவன் கை பட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டது என்று நடிகர் பார்த்தீபன் விமர்சனம் செய்துள்ளார். 

நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த சிறுவர்களை அமைச்சர் சீனிவாசன் , “டேய் ,வாடா வாடா செருப்பை கழற்றுடா,” என்று அழைக்கவே உடனே அங்கே வந்த இரண்டு சிறுவர்களில்  ஒருவன் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டான்.பின்னர் அமைச்சர் அருகில் இருந்த உதவியாளர் செருப்பை எடுத்து ஓரமாக வைத்தார்.அமைச்சருடன் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இந்த சம்பவம் நடக்கும் போது உடன் இருந்தனர்.

Image result for parthiban oththa seruppu

இந்நிலையில் அமைச்சரின் இந்த செயல் பெரும் சர்ச்சையாக மாறியது.இதற்கு பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.கண்டங்கள் வலுக்கவே இது குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்தார் அந்த  விளக்கத்தில், என் பேரனாகவே அந்த சிறுவனை கருதி செருப்பை கழட்டிவிடுமாறு கேட்டேன்.கழற்ற சொன்னதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.

இவ்வாறு அவர் விளக்கம் அளித்த போதிலும் பல தரப்பில் இருந்து அவருக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் நடிகர் பார்த்தீபன் தன் ட்விட்டர் பக்கத்தில் மந்திரிச்சி விடப்பட்ட செருப்பு ! கல்…. (ராமர்) கால் பட்டு அகலிகை ஆனது – திண்டுக் கல்… கால் பட்ட செருப்பின் அகலாத Buckle, பாவப்பட்ட சிறுவன் கை பட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டது என்று விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்