கனடாவில் மரணமடைந்த காணாமல்போன பாகிஸ்தான் மனித உரிம பெண் ஆர்வலர்!
பாகிஸ்தானில் மனித உரிமை ஆர்வலராக பணியாற்றி வந்தவர் காணாமல் போயிருந்த நிலையில், தற்போது அவர் கனவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிந்து தனி நாடாக உருவாக நடைபெற்ற போராட்டத்திற்கு பின்பு, 2016ஆம் ஆண்டில் 100 பெண்கள் பட்டியலில் பிபிசியில் கரீமா பலூச் அவர்கள் முதலிடத்தைப் பிடித்தார். இந்நிலையில் பலுசிஸ்தான் மக்கள் கடத்தப்பட்டு பலர் காணாமல் போயினர். இதனையடுத்து காணாமல் போனவர்கள் ஆட்கடத்தல் ஊழியர்கள் மூலம் மிரட்டப்பட்டு இருக்கலாம் எனவும் அவர்கள் சித்திரவதையை அனுபவித்து வருவதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் ராணுவமும் இதைத் திட்டமிட்டு செய்து வருவதாகவும் கரீமா பலூச் உலக அளவில் தீவிரமாக பிரச்சாரம் செய்துவந்தார்.
இந்நிலையில பிரச்சாரம் செய்து வந்த கரீமா பலூச் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக காணாமல் போய் விட்டார், இந்நிலையில் தற்பொழுது கடைசியாக டிசம்பர் 20ஆம் தேதி காவல்துறையினரால் இவர் கனடாவிலுள்ள ஒரு சாலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பொதுமக்கள் உதவியுடன்இது கரீமா தான் என அடையாளம் காணப்பட்ட பின்பு, பாகிஸ்தான் நாட்டில் இருந்து இவர் கனடாவில் குடியேறியவர் எனவும் தற்போது கனடாவில் மரணம் அடைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.