கொரோனா குறித்து பரவும் தவறான தகவல்கள் – WHO எச்சரிக்கை…!
உலகம் முழுவதும் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக கொரோன தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா குறித்த தவறான தகவல்கள்
கொரோனா தொற்று குறித்து மக்களிடையே தவறான தகவல்கள் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப தலைமை அதிகாரி மரியா வான் கெர்கோவ் அவர்கள் கொரோனா பரவல் குறித்து கூறுகையில், ஒமிக்ரான் திரிபு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பது தவறான தகவல். கொரோனா பரவல் முடிந்துவிட்டது என்பது தவறான தகவல். ஒமிக்ரான் தான் கடைசி திரிபு என்பது தவறான தகவல், அடுத்தடுத்த திரிபுகள் வரலாம் என்றெனு தெரிவித்துள்ளார். மேலும், இந்த தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளார்.