மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ஹோரர் படத்தின் டைட்டிலை வெளிப்படுத்தியுள்ளார்.
கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சைக்கோ. ஒரு கிரைம் திரில்லர் திரைப்படமான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக விஷாலுடன் இணைந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்க போவதாக கூறியது, ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விஷாலே அதை இயக்கப் போவதாகவ்ம் கூறப்பட்டது.
இந்த ஊரடங்கில் அவர் மூன்று கதைகளை ரெடி செய்து வைத்திருப்பதாக கூறியிருந்தார். அதில் ஒன்று அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகம் என்றும், அதில் அருண் விஜய் நடிப்பதாகவும் கூறப்பட்டது. அதனையடுத்து சிம்பு மற்றும் வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அதனை 2021ல் தொடங்கிருப்பதாகவும் எனவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் மூன்றாவதாக ஒரு ஹோரர் படத்தை அருண் விஜய்யின் படத்தை அடுத்து எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2014ல் வெளியான ‘பிசாசு’ என்ற படத்திற்கு பின் இவர் இயக்கும் இரண்டாவது படமாகும். மேலும் இந்த படத்தின் டைட்டிலை ‘ காவு’ என்று வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காவு என்றால் கடவுளுக்கு பலி கொடுப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை குறித்து கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…