ரஜினி – கமல் பட இயக்குநருடன் கைக்கோர்க்கும் மிர்ச்சி சிவா.!

Default Image

மிர்ச்சி சிவா அடுத்ததாக பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் மிர்ச்சி சிவா. கலக்கலப்பான நடிகரான சிவாவின் படங்கள் ரசிக்கத்தக்கதாக இருக்கும். எனவே சில படங்கள் தோல்வியை தழுவினாலும் மற்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இவர் மெகா ஹிட் பட இயக்குநருடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம் சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் பாபா படத்தை இயக்கியவரும், கமல்ஹாசனை வைத்து ஆளவந்தான் படத்தை இயக்கியவருமான சுரேஷ் கிருஷ்ணா, பல ஆண்டுகளுக்கு பின்னர் மிர்ச்சி சிவாவை வைத்து ஒரு காமெடி திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்