வாழ்வில் நாம் நினைத்ததை எளிதில் அடைந்து விட முடியாது. அதற்கு நமது உடலும், மனதும் ஆரோக்கியமாக வைத்திருத்தல் மிக அவசியமாகும். உடல் வலிமையையும், மன வலிமையையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். அதற்க்கு காலையில் இந்த 6 விஷயங்களை பின்பற்றினாலே போதும்.
முதல் விஷயம் காலையில் எழுந்ததும் அமைதியாக இருக்க வேண்டும். இந்த இடத்தில அமைதி என்பது யாருடனும் பேசாமல், பேப்பர் படிப்பதோ, போன் உபயோகப்படுத்துவதோ இல்லை. மாறாக, தியானம் செய்ய வேண்டும், அல்லது கடவுளை வணங்க வேண்டும்.
இரண்டாவது நேர்மறையான எண்ணங்களை நம் மனதிற்குள் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக, ‘நான் மிகவும் தைரியமானவன் தன்னம்பிக்கை உடையவன்’ என நீங்களே உங்களுக்குள் கூறிக்கொள்ள வேண்டும். இதனை திரும்ப திரும்ப கூறி வருவதால் நம் மனமே அதனை ஏற்றுகொண்டு உங்களை நேர்மறையான எண்ணம் கொண்டவராக மாற்றிவிடும்.
மூன்றாவது, நம் எண்ணம் போல வாழ்க்கை. அதாவது, நாம் நமது இலட்சியத்தை அடைந்து எப்படி வாழ போகிறோம் , என்பதை அடிக்கடி நினைவுபடுத்தி கொள்ள வேண்டும். இது நாம் அடுத்தடுத்து செய்யும் வேலைக்கு உத்வேகத்தை அளிக்கும்.
நான்காவது, உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய ஜிம்தான் செல்ல வேண்டும் என்றில்லை. தினமும் குறைந்தது 1 நிமிடம் ஸ்கிப்பிங் செய்தாலே போதுமானது. உடற்பயிற்சி செய்யும்போது, நம் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் சீராக செல்கிறது. அதனால் அன்றைய தினம் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது.
ஐந்தாவது, வாசிப்பு பழக்கம், இந்த வாசிப்பு பழக்கமானது நமது அடுத்தகட்ட நகர்வுக்கானதாக இருக்க வேண்டும் அதற்கான புத்தகத்தை படிக்க வேண்டும். அது நியூஸ் பேப்பர், தன்னம்பிக்கை புத்தகம், பாடப்புத்தகம், போட்டித்தேர்வுக்கான புத்தகம் என எதுவாயினும் அது நம்மை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்படியாக இருக்க வேண்டும்.
ஆறாவது எழுத்து பழக்கம். நாம் அடுத்து என்ன செய்ய போகிறோம், நமது அடுத்தடுத்த சின்ன சின்ன குறிக்கோள், நமது பெரிய லட்சியம் என அனைத்தையும் எழுதிவைக்க வேண்டும். போனில் குறைத்துக்கொள்ளலாம் என இருக்க கூடாது. நமே கைப்பட எழுதி முறைப்படுத்த வேண்டும். அப்படி எழுதுகையில் அந்த லட்சியம் நம் மூளைக்குள் ஆழமாக பதிந்துவிடும். ஆதலால் அதனை நிறைவேற்றும் வழியை தானாக தேட துவங்கிவிடும்.
இந்த ஆறு விஷயங்களை பின்பற்றினாலே வாழ்வில் நாம் நினைத்த இடத்தை எளிதில் அடைய முடியும். இந்த கருத்துக்கள் அனைத்தும் மிராக்கிள் மார்னிங் ( MIRACLE MORNING ) புத்தகத்தில் பலகட்ட ஆய்வுகளுக்கு பின்னர் எழுதி வைக்கப்பட்டிருக்கும் முக்கிய குறிப்புகளாகும்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…