மாண்டஸ் புயலால் எந்த பாதிப்பு வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்.! அமைச்சர் உறுதி.!
மாண்டஸ் புயலால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் தமிழகத்தில் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது – அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
தமிழகத்தை மாண்டஸ் புயல் நெருங்கி வருவதால் வடதமிழகம் பல்வேறு இடத்தில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை முதல் கரையை கடக்கும் என்பதால் மழை தீவிரமடையும் இதனை ஒட்டி கனமழை முதல் மிக கனமழை வரையில் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்து வந்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாண்டஸ் புயலால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் தமிழகத்தில் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 206 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உணவு எப்போதும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 400 மின்கம்பங்கள் தயார் நிலையில் இருக்கிறது. புயலின் காரணமாக மரம் விழுந்தால் அதனை அப்புறப்படுத்த ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். ,மீட்பு படையினர் 120 பேர் 3 குழுக்களாக செங்கல்பட்டில் இருக்கின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.