ஆஸ்திரேலியாவில் சமூக இடைவெளியை பின்பற்றாத மந்திரி! நேற்று ராஜினாமா!

Default Image

ஆஸ்திரேலியாவில் சமூக இடைவெளியை பின்பற்றாத மந்திரி, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளை தாக்க துவங்கியது. இந்த கொரோனா வைரஸால் உலக அளவில், இதுவரை 3,220,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 228,224 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அமெரிக்காவில் தான் இந்த வைரஸ் நோயால் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு, இந்த நோயால் பலியானாரின் எண்ணிக்கை 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் கண்டிப்பாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும், வெளியில் வரும் போது, கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிரேவர் வாட்ஸ் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் காவல்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு இலாகாவின் நிழல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சட்டமன்ற தொகுதியான வடக்கு டூம்பாவோ நகரின் விரைவு வழிச்சாலையில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் போது, அவரும் 2 போலீஸ் அதிகாரிகளும் கொரோனா ஊரடங்கையொட்டி மாகாண அரசு பிறப்பித்திருந்த சமூக இடைவெளி கட்டாயம் என்கிற உத்தரவை மீறியதாக கூறப்படுகிறது.

இவர்களது இந்த செயல் ஆஸ்திரேலியாவில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், டிரேவர் வாட்ஸ் உள்ளிட்ட மூவருக்கும் தலா 1,334 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் ( இந்திய மதிப்பின்படி ரூ.67 ஆயிரம்) விதிக்கப்பட்டது. பின்னர் மந்திரியே அரசின் விதிமுறைகளை மீறியதால், அவர் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, டிரேவர் வாட்ஸ் தனது மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.  டிரேவர் வாட்ஸ் பதவி விலகியதையடுத்து, அவருக்குப் பதிலாக டான் புருடி என்பவர் காவல்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு நிழல் மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்