அமைச்சரு.,க்கும்-‘முதல்’அமைச்சரு.,க்கும் முட்டா?? கசிகிறது தகவல்
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவகாரத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் நலம் குறித்து , முதல்வர் ஏன் விசாரிக்கவில்லை என்று கட்சியினர் கேள்வி எழுப்புவதாகவும் இது அகட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைநகர் சென்னையில் கொரோனா திவீரமாக பரவி வருகிறது தொற்றுநோயை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை, முதல்வர் பழனிச்சாமி நியமித்தார். இந்தக்குழுவில், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சென்னையில் உள்ள அடையாறு, சோழிங்கநல்லுார் உட்பட, மூன்று மண்டலங்களில், நோய் தடுப்பு பணிகளை, ஒருங்கிணைக்கும் பணிகளி ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த மாதத்தில் அமைச்சர் அன்பழகனுக்கு உடல் நலம் குன்றியது.
உடல் நல பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை நடந்தது.பரிசோதனையில் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சரை எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்பு கொண்டு நல விசாரித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சர் அன்பழகனுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள், முதல்வரிடம் கேட்ட போது, அதை அவரே மறுத்து விட்டார் என்று பதில் அளித்தார்.
இவ்வாறு இருக்க ஜூன் 30.,ந்தேதி, மியாட் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அமைச்சர் அன்பழகனுக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதன்பிறகும், அமைச்சரை தொடர்புகொண்டு முதல்வர் நலம் விசாரிக்கவில்லையாம். முதல்வரின் நடவடிக்கை அமைச்சர் தரப்பினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.
ஏன்? இந்த கேள்வி கட்சினரிடையே என்றால் தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகனுக்கும், கொரோனா தொற்று உறுதியானது இந்நிலையில் அவருடைய உடல் நலம் குறித்து முதல்வர், மருத்துவர்களை தொடர்பு கொண்டு பேசினார். சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் சென்று, சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.இவ்வாறு இருக்க உயர்கல்வித்துறை அமைச்சர் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவரை முதல்வரோ, அமைச்சரோ கண்டுகொள்ளவில்லை.
இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி வட்டராக தகவல் வெளியாகியுள்ளது.இதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம், எம்.எல்.ஏ.,க்கள் சதன் பிரபாகர், குமரகுரு ஆகியோர், கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பாதிக்கப்பட்ட அவர்களிடம், மொபைல் போனில் நலம் விசாரித்ததாக, முதல்வர் பழனிச்சாமி கூறியிருக்கிறார். ஆனால், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் குறித்த எந்த தகவலையும், அவர் இதுவரை வெளியிடவில்லை.என்று அந்த தரப்பு அதிருப்தி கூறி வருகிறது.