பெரு நாட்டில் சுரங்கத்தொழிலாளர்கள் பேருந்து விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இந்நாட்டில் உள்ள அப்ருனிமெக் மாகாணத்தில் காப்பர் சுரங்கம் அமைந்துள்ளது. ஹடபம்பாஸ் நகரில் அமைந்துள்ள இந்த சுரங்கத்திலிருந்து வழக்கம்போல் வேலை முடிந்தவுடன் 18 பணியாளர்களை ஏற்றி கொண்டு அந்த நிறுவனத்தின் பேருந்து சென்றுள்ளது. அப்பொழுது மலைப்பாங்கான பகுதி வழியாக பேருந்து சென்றுள்ளது.
அச்சமயத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென 200 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அறிந்த மீட்பு படையினர், விரைவாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…